புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்கினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோயில் திருவிழாவின் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. 


இந்த ஜல்லிக்கட்டில், ஆலங்குடி, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 400-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. 


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காளைகள் மட்டுமில்லாமல் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் வந்திருந்தன. 


இவைகள் கால்நடை மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன. 


கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 11 தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை மெரினாவில் மாபெரும் போராட்டத்தை மக்கள் நடத்தியதில் ஜல்லிகட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது.


அதை தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் தினமான ஜன.,15-ம் தேதி பால மேட்டில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது முடிந்தது.


இந்த ஜல்லிக்கட்டில் போட்டியில் 1000 காளைகள், 1188 வீரர்களுக்கு டோக்கன் தரப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்தினர்.


இந்நிலையில், புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்கினர்.


இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள், வேடிக்கைப் பார்த்தவர்கள் உள்பட 28 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.காயமடைந்த 2 பேரில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.