தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டண உயர்வு கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தக் கட்டண உயர்வால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். சில இடங்களில் பொதுமக்கள் இந்த கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 


இந்நிலையில் முன் அறிவிப்பின்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் இந்த மனுவை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அப்போது மனுவை அவசர வழக்காக விசரிக்க மறுத்த நீதிபதி சுப்பையா, மனுவை வழக்காக தாக்கல் செய்தால் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று கூறியுள்ளார்.


இதையடுத்து, இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதில் தலயிட முடியாது என்று தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் எல்லா பொருட்களின் விளையும் கூடிக்கொண்டேதான் வருகிறது இது அனைத்திலும் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


இதை தொடர்ந்து புதிய  பேருந்து கட்டண விவரத்தை அனைத்து பேருந்துகள் ஒட்டுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.