தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இன்று 4-வது நாளாக பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கட்டண உயர்வுக்கு மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், மாணவர்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகினர்.  இந்த நிலையில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.


ஆனால் கட்டண உயர்வு திரும்ப பெறப்படாது என அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.


இந்நிலையில்,சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் தொடங்கியது.


அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் தொடங்கியது.இந்த போராட்டத்தில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.