சென்னை வாசிகளுக்கு இனி தண்ணீர் என்பது எட்டா கனியா?
தமிழகம் முழுவதும் உள்ள கேன் வாட்டர் உற்பத்தி நிறுவனங்கள் இன்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்!
தமிழகம் முழுவதும் உள்ள கேன் வாட்டர் உற்பத்தி நிறுவனங்கள் இன்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்!
நிலத்தடி நீர் எடுப்பதற்கு தடை விதிக்கும் அரசாணையை திரும்பப் பெற கோரி தமிழகம் முழுவதும் உள்ள 300 கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக சென்னை வாசிகளில் வாழ்வாதாரமாக இருக்கும் கேன் வாட்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுப்பதற்கு அரசிடம் தடை இல்லா சான்று பெற வேண்டும் என தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து 75 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அந்த மனுவுக்கு பதில் அளித்த தமிழக அரசு, வர்த்தக நோக்கத்திற்காக நிலத்தடி நீரை தனியார் நிறுவனங்கள் உறிஞ்சுவதை தடை செய்யவே இந்த அரசாணை வெளியிடப்பட்டதாக தெரிவித்தது. இதனையடுத்து தமிழக அரசின் அரசாணையை உறுதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் முரளி, "குடிநீர் தேவைக்காக மட்டும் நிலத்தடி நீரை எடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். உயர் நீதிமன்ற ஆணையை திரும்பப் பெறாவிட்டால் எங்களால் குடிநீர் விற்பனையை செய்ய முடியாது. எனவே உயர் நீதிமன்ற ஆணைய திரும்ப பெற வேண்டும்" என தெரிவித்தார். மேலும் இந்த கோரிக்கையினை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் நிறுவனங்களின் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.