ரத்து செய்யப்பட்ட ஆர்கேநகர் தேர்தல் ஜூன் மாதன்?
ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செயததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செயததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆர்கேநகரில் ஏப்ரல் 12-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது.
இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, டெல்லியில் நடந்த ஆலோசனைக்கு பிறகு ஆர்கேநகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆர்கேநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி லஞ்சம் கொடுத்த ஆவணம் சிக்கியது. இது தொடர்பான வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கையுடன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆகியோர் டெல்லி விரைந்தனர்.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் நஜீம் ஜைதியுடன் நேற்று முழுவதும் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் அதிகாலையில் ஆர்கேநகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் ஆர்கேநகர் தேர்தல் ரத்து தொடர்பாக 29 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் எப்படியெல்லாம் பணப்பட்டுவாடா நடைபெற்றது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரத்து செய்யப்பட்ட ஆர்கேநகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 4 அல்லது ஜூன் 6-ம் தேதி நடைபெறக் கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.