மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் ரிஸ்வானா பானு என்ற இளம்பெண் தனது தந்தை முகமது இஸ்மாயிலுடன் வசித்து வந்தார். ரிஸ்வானா பானுவுக்கு வயது 22. மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் இஸ்மாயில் புதுமண்டபத்தில் தையல் கடை நடத்தி வருகிறார். அவ்வப்போது ஆடு அறுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரது மகள் ரிஸ்வானா பானு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்த நிலையில் 8 மாதங்களுக்கு முன் விவகாரத்து பெற்றார். இதனால் மறுதிருமணத்திற்கு முகமது இஸ்மாயில் ஏற்பாடு செய்துள்ளார். இந்த திருமத்திற்கு ரிஸ்வானா பானு மறுத்ததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.


நேற்று பகல் 1 மணிக்கு வீட்டில் ரிஸ்வானா பானுவை கழுத்தறுத்து கொலை செய்த முகமது இஸ்மாயில் தலைமறைவானார். இதை பார்த்ததாயார் மதீனா பேகம் மயக்கமடைந்தார்.கொலை நடந்த நேரத்தில் மகன் கல்லுாரிக்கு சென்றிருந்தார்.


இந்நிலையில் தற்போது முகமது இஸ்மாயிலை நேற்று இரவு தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். மகள் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட விரக்தியில் கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் கூறினார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.