புதுவையில் அரிசிக்கு பதில் பணம் வழங்குவது குறித்த ஆளுநர் உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புதுச்சேரியில் மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச அரிசியின் எடை குறைவாக உள்ளது. எனவே, அரிசிக்குப் பதிலாக பயனாளிகளுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது அதில்., இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குடியரசுத்தலைவர் அறிவுறுத்தலின்பேடி உள்துறைஅமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு புதுச்சேரி அமைச்சரவை கட்டுப்பட வேண்டம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.