மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்தது. இதனையடித்து மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 17-ம் தேதி மற்றும் 18-ம் தேதி ஆகிய நாட்களில் 48 மணி நேர தொடர் ரயில் பாதை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 


இந்த போராட்டத்துக்கு திமுக,  காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., மமக, திக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அனைத்து விவசாயிகள், வணிகர்  சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.


டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பெரம்பூரில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். திமுக கொடியை ஏந்தி ஊர்வ லமாக சென்ற திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். முடியட்டும், விடியட்டும் என்றும் அப்போது அவர்கள் முழக்கமிட்டனர். பின்னர் பெரம்பூர்  ரயில் மறியலில் ஈடுப்பட சென்றபோது, பெரம்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று போலீசார் பெரம்பூர் ரயில் நிலையம் முன்பு மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டனர்.


திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, திருமாவளவன் மற்றும் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் மற்றும் அவரது தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் விவசாயில் ரயில் மறியலில் ஈடுப்பட்டனர். விவசாயிகளுடன் திமுக, காங்கிரஸ் கட்சியினரும் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். போலீஸ் தடுப்பை மீறி காரைக்கால் - பெங்களூர் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 


தஞ்சாவூர் அருகே அய்யனாபுரத்தில் தண்டவாளத்தில் விவசாயிகள் அமர்ந்தனர்.விவசாயிகளுடன் திமுகவினரும் தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கமிட்டனர்.விவசாயிகளின் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளார். 


தஞ்சை ரயில் நிலைய தண்டவாளத்தில் விவசாயிகள் சமையல் செய்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை-கும்பகோணம் ரயிலை மறித்து 500-க்கும் மேற்பட்டோர் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல திருச்சி - கரூர் குடமுருத்தி ரயில் தண்டவாளத்தில் குடிசை அமைத்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தேசிய தென்னிந்திய நதிகள் ஙச்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது ரயில் தண்டவாளத்தில் குடிசை அமைத்து, நாற்று நட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிவகங்கையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.