காவிரி: 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க கோர்ட் உத்தரவு
சம்பா சாகுபடிக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய கர்நாடக அரசு வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதேபோல தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி விவகாரத்தில், கர்நாடக அரசின் வாதத்தை நிராகரிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
அப்போது பேசிய நீதிபதிகள்:- கோர்ட் உத்தரவை பிறப்பித்தவுடன், அதை அமல்படுத்த வேண்டும். கர்நாடகா அரசு அதை சரியாக செயல்படுத்தவில்லை. சட்டத்தை மக்கள் தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது. இந்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவுக்கு ஏற்றதல்ல என்று கூறி கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் கர்நாடகாவின் மனுவை நிராகரித்தனர் நீதிபதிகள்.
செப்டம்பர் 20-ம் தேதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.