மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பும் அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகப்படுத்தப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. முன்பு வினாடிக்கு 50,000 கன தற்போது அது 65,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை விரைவில் எட்டும் எனத் தெரிகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.59 அடியாக உள்ளது. நீர் இருப்பு 89.67 டிஎம்சி ஆக உள்ளது.
இந்தநிலையில், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான திறந்த விடப்படும் நீரின் விநாடிக்கு 18700 கன அடியில் இருந்து 25000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.