சிபிஐ சோதனை அரசியல் பழிவாங்கும் செயல் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, காரைக்குடி, மும்பை, டெல்லி நொய்டா உள்பட 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மத்திய நிதியமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் இன்று சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சிபிஐ சோதனை தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறியதாவது:-
சிபிஐ சோதனைக்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தான் காரணம். தமிழகத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது, மத்திய அரசுக்கு பதிலளிப்பதால் ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடக்கிறது. அவர் மீது எந்த தவறு இல்லை. இது அரசியல் ரீதியான பழிவாங்கும் செயல் என கே.ஆர். ராமசாமி கூறி உள்ளார்.