நீட் தேர்வை நடத்துவதில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் இன்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வு வினாக்களில் தமிழிலில் மொழி பெயர்ப்பு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது. அதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நடந்து வருகிறது.


இந்த வழ்கக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், சிபிஎஸ்இ நடத்தும் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. தேர்வை நடத்துவதில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது.


கேள்விகளுக்கான விடைகளை பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்கிறீர்களா? பெரும்பான்மையை காரணம் காட்டி தவறான விடைகளை கூட சிபிஎஸ்இ ஏற்கிறது. இது எந்தவகையில் நியாயம்?


பீகார் மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி? வழக்கு விசாரணையில் இருந்தும் முன்பே தேர்வு முடிவை வெளியிடப்பட்டுள்ளது என பல்வேறு கேள்வி எழுப்பி உள்ளனர். தொடர்ந்து இவ்வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.