சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் 4,138 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியே 71 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இன்று கணக்கு தேர்வு 2-ம் தாள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் வாட்ஸ் ஆப்பில் லீக் ஆகியது என செய்திகள் பரவ தொடங்கியது. இது செய்தி தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கேள்வித்தாள் எப்படி லீக் ஆனது? எப்பொழுது லீக் ஆனது? என்ற விவரம் குறித்து தெரியவில்லை. 


இதைக்குறித்து டெல்லியின் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா கூறிகையில், கணக்கு தேர்வு கேள்வித்தாள் லீக் ஆகி இருப்பதை உறுதி செய்யப்பட வில்லை. ஆனால் செய்திகள் வந்துள்ளன. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. கேள்வித்தாள் லீக் ஆனா சம்பவம் உண்மை என்றால், வினாத்தாளை வெளியிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேர்வுக்காக கடுமையாக உழைத்த மாணவர்கள் கவலைப்பட வேண்டும் என டெல்லி கல்வி அமைச்சரம், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.



 


கணக்கு தேர்வு கேள்வித்தாள் எப்படி லீக் ஆனது என்பதை அறிய சிபிஎஸ்இ உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. 


கேள்வித்தாள் லீக் தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு வினாத்தாள் லீக் ஆகவில்லை. எந்த ஒரு வினாத்தாள் கட்டுகளும் சீல் பிரிக்கப்படாமலேயே தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யப்பட்டு உள்ளது. தேர்வின் நம்பகத் தன்மையை பாதிக்கும் வகையில், பொய்யான செய்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தந்து அறிக்கையில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.