நீட் தேர்வு விஷயத்தில் இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய மாநில அரசுகள் செல்ல வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக மருத்துவக் கல்லுாரிகளில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப் படாததால், 2017 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப, தகுதி அடிப்படையில் முறையான கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீட் தேர்வு தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைத்து அதற்கு விளக்கம் கேட்டுள்ளனர்.


‘நீட் தேர்வு கொணடு வந்தபிறகு பயிற்சி மையங்கள் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பணம் செலுத்தி படிக்க முடியாத ஏழை மாணவர்களை வேறுபடுத்தும் செயலாகும். பயிற்சி மையங்களால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறப்பதில்லை. எனவே, முந்தைய காங்கிரஸ் - திமுக அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப்பெறக்கூடாது?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 



இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இனியாவது இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் மத்திய - மாநில அரசுகள் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


இது குறித்து அவர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்,  "ஏழை - எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்ன போதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது. இப்போது சென்னை உயர் நீதிமன்றமே அதனை வழிமொழிந்து உள்ளது. எனவே  நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் மத்திய அரசும்,  மாநில அரசும் பயணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.