புது டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் காவல் துறைக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய "152 காவல் அதிகாரிகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் விருதை அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல்துறை அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சிறப்பு விருதானது 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்று குற்றவியல் விசாரணையின் தொழில்முறை தரங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் சிறப்பாக புலனாய்வு செய்யும் விசாரணை அதிகாரிகளை அங்கீகரிக்கும் நோக்கத்துடனும் இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.


இந்தப் பட்டியலின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் 15 பேர் இந்த பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இப்பதக்கம் பெறுபவர்களில் "28 பெண் காவல் அதிகாரிகளும் உள்ளனர். அதில் நான்கு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


ALSO READ | TN Budget LIVE: தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது: நிதியமைச்சர்


தமிழ்நாட்டைச் சேர்ந்த பதக்கம் பெறுபவர்களின் பட்டியல்:
* சிபிசிஐடி காவல் ஆய்வாளர் (நாகப்பட்டினம்) எம்.சரவணன், 
* அனைத்து மகளிர் காவல் நிலையம் (திருவண்ணாமலை) காவல் ஆய்வாளர் அன்பரசி
* புதுச்சேரி காவல் நிலையம் (கடலூர்) காவல் ஆய்வாளர் கவிதா, 
* வெங்கல் காவல் நிலையம் (திருவள்ளூர்) காவல் ஆய்வாளர் ஜெயவேல், 
* திருப்போரூர் காவல் நிலையம் (செங்கல்பட்டு) காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, 
* சென்னை பெருநகர காவல்துறை உளவுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜீ.மணிவண்ணன், 
* குரோம்பேட்டை காவல்நிலையம் (சென்னை) காவல் ஆய்வாளர் பி.ஆர். சிதம்பரம் முருகேசன் 
* நாகர்கோவில் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் சி. கண்மணி 


ஆகியோர்களுக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது.!



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR