சமூக நீதியை மத்திய அரசு சீர்குலைக்கிறது - வைகோ காட்டம்
மத்திய அரசு சமூக நீதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. புதிய வருடத்தை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். தங்களுக்கு இனிப்புகள் பரிமாறியும், பட்டாசு வெடித்தும் வரவேற்று இந்த வருடத்தில் அனைத்தும் நல்லதாக நடக்க வேண்டுமென இறவனையும் பிரார்த்தித்துவருகின்றனர். மக்களுக்கு அரசியல் தலைவர்களும் தங்களது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ மத்தியில் ஆளும் மோடி அரசு பாரதிய ஜனதாவின் ஒவ்வொரு அஜன்டாவையும் நிறைவேற்றி வருகிறது. காஷ்மீரில் 370-வது சட்ட பிரிவை நீக்கினார்கள். புதிய கல்வி கொள்கையை உருவாக்கி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்த பார்க்கிறார்கள். தமிழக கவர்னரும் சனாதன சக்திகளின் ஏஜெண்டாக இருந்து புதிய கல்வி கொள்கையை ஆதரித்து பேசுகிறார்.
தமிழையும், திருக்குறளையும் பேசி மக்களை ஏமாற்றி விட முடியாது. சமூக நீதியையும், மதசார்பற்ற தன்மையையும் சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி தொகையை வழங்குவதில் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. சகோதரர் மு.க.ஸ்டாலின் ஆட்சி இந்தியாவில் சிறந்த ஆட்சியாக பாராட்டப்படுகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எந்த முயற்சியும், போராட்டமும் எடுபடாது” என்றார்.
மேலும் படிக்க | எவ்ளோ பெரிய தந்தம்... ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியோடிய நபர் - நீலகிரியில் பரபரப்பு
மேலும் படிக்க | ஒசூரில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா
மேலும் படிக்க | தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... அவதார் டைனோசர் பொம்மைகளின் ஊர்வலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ