புதுடெல்லி: சர்வதேச அளவில் கொரோனா வைரசின் புதிய வகையான ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் கவலைகள் அதிகரித்துள்ளன. ஒமிக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்ட நிலையில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், தமிழக அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எழுதியுள்ள கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது. இரு தினங்களுக்கு முன்ந்தாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால், நாட்டின் 18 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.


அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், மாநில அரசு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை  (Coronavirus Control Activities) தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இதற்கு முந்தைய கடிதத்தை மேற்கோளிட்டு காட்டும் மத்திய சுகாதாரத்துறை செயலாளரின் கடிதம், ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக சர்வதேச பயணிகளை கண்காணிப்பது, 14 நாட்களுக்கு தொடர்ந்து அவர்களின் ஆரோக்கிய தகவல்களை புதுப்பிப்பது நோய் பரவ சாத்தியமுள்ள ஹாட்ஸ்பாட்டுகள் என எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி பேசுகிறது.


இதைத்தவிர, தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்,  தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 


நவம்பர் மாதம் 19 முதல் 25 வரையிலான வாரத்திற்கும், 26 நவம்பர் முதல் டிசம்பர் 2 தேதி வரையிலான வாரத்திற்கும் இடையிலான ஒப்பீட்டில், வேலூரில் 37.6% பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், திருவள்ளூரில் 16.2 சதவிகிதமும், சென்னையில் 16.09 சதவிகிதமும் பாதிப்பு அதிகரித்திருப்பதை மத்திய சுகாதாரத்துறை செயலாளரின் கடிதம் தெரிவிக்கிறது.


கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான அனைத்து சாத்தியமான ஒத்துழைப்பையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | தடுப்பூசி பயத்தால் 'செயற்கை கையை’ செட்டிங் செய்த நபர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR