இழப்பீட்டுத் தொகை வழங்க முடியாது; கைவிரித்த மத்திய அரசு; கண்டனம் தெரிவித்த திமுக
மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீட்டுத்தொகை வழங்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கு தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வருவாய் எதிர்பார்த்த அளவை விட குறைவாக இருப்பதால், மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீட்டுத்தொகை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு மாநில அரசுகள் குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இழப்பீட்டுத் தொகை வழங்காமல் இருந்தால், கடும் நிதி நெருக்கடி ஏற்படும் என மாநில அரசுகள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது அக்டோபர், நவம்பர் மாத இழப்பீடு தொகைகளும் வழங்கப்படாது எனக் கூறியிருப்பது பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.
மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீட்டுத்தொகை வழங்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கு தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதுக்குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியது....,
ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய பாஜக அரசு கைவிரித்துள்ளதை, அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பீடு - நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை முதலமைச்சரும், நிதியமைச்சரும் வெளியிட வேண்டும். இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையுமின்றி அமைதி காப்பது, தமிழகத்திற்கு மேலும் சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமல்படுத்தப்பட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் வரி கட்டமைப்பை சீர்திருத்த மையம் திட்டமிட்டுள்ளது. அதாவது தற்போதுள்ள குறைந்தபட்ச 5 சதவீத வரியை 9-10 சதவீதமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போதைய 12 சதவீத வரியின் கீழ் 243 தயாரிப்புகள் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் வந்துள்ளன. ஜி.எஸ்.டி வரி வசூலை அதிகரிப்பதற்கு என்ன நவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வரும் டிசம்பர் 18 ஆதேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.