தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பக்கம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் வீட்டுக்குலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியே பதிவாகி வருகிறது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 


தமிழகத்தின் மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இதன்காாரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை வெளியில் அநாவசியமாக வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


சென்னையை பொறுத்தவரை காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். கர்நாடகா முதல் தென் தமிழகம் வரை உள்ள வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. 


இது குறித்து சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது... கோவை, நீலகிரி, வேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலை காணப்படும் என தெரிவித்துள்ளது.