ரகசிய வாக்கெடுப்பு கோரி சட்டசபையில் அமளி
பரபரப்பான சூழ்நிலையில் சிறப்பு சட்டசபைக்கூட்டம் இன்று காலை கூடியது.
சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் சிறப்பு சட்டசபைக்கூட்டம் இன்று காலை கூடியது.
கூட்டம் தொடர்ந்து முதலில் யார் பேசுவது என்பதில் அமளியும் குழப்பமும் ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் முழக்கமிட்டனர்.
முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
சட்டசபை இன்று கூடிய உடன் சபாநாயகர் தனபால் சபை கூடியதற்கான காரணத்தை விளக்கினார். இதனைத் தொடர்ந்து முதலில் யார் பேசுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. செம்மலை பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் கோரினர்.
பெரும் அமளிக்கு இடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானித்தை முன்மொழிந்தார். சட்டசபையின் கதவுகள் மூடப்பட்டன. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவும், ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் முழக்கமிட்டனர்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை கோரிக்கை வைத்தார். அவர்களுக்கு ஆதரவாக திமுகவினர் முழக்கமிட்டனர்.
சட்டசபையில் அமளி நீடிப்பதால் வாக்கெடுப்பு தாமதமாவதாக தகவல் வெளியாகியுள்ளது.