சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கும் நீதிமன்ற காவல்!!
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அவரது 11 வயது மகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் எனவும் சமீபத்தில் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற போது தான் இது தனக்கு தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகளை அவர்கள் கொல்ல முற்பட்டுள்ளனர் என சிறுமியின் கழுத்தில் இருந்த காயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர் காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமி வசிக்கும் அபார்ட்மெண்ட்-ல் சுமார் 300 குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். சிறுமி லிப்ட்டில் செல்ல வரும் போது அவரை அழைத்து காலியான தளங்களில் வைத்து லிப்ட் ஆப்பரேட்டர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரையடுத்து, அங்குள்ள ஊழியர்கள் மேலும் 5 பேர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மேலும் 11 பேர் மற்ற வகையில் உதவி செய்துள்ளனர். சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடந்த 7 மாதங்களாக இந்த கொடூரம் நடந்துள்ளது. பின்னர் போலீசார் 18 பேரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 17 பேரும் இன்று சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் வருகிற ஜூலை 31 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 17 நபர்கள் மீதும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல்.