சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கு (Lockdown) நீட்டிக்கப்பட்டு உள்ளதால், பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கு செல்வதற்கு  இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் சிலர், எங்களிடம் வாருங்கள் இ-பாஸ் பெற்று தரப்படும் என விளம்பரம் செய்து வந்தனர். இதனை அறிந்த தமிழக காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ‘இ-பாஸ்’ கட்டாயம்


அதாவது வேற மாவட்டத்திற்கு செல்வதற்கோ அல்லது வெளி மாநிலம் செல்வதற்கு இ-பாஸ் (E-pass) தேவை என்றால், 1,500 ரூபாய் கொடுத்தால் 2 மணி நேரத்தில் பெற்றுத்தரப்படும் என விளம்பரம் செய்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை (Chennai) மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். அதேநேரத்தில் இதுபோன்ற மோசடிகளை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவர்களை நம்பி மாற வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.


ALSO READ | E-Pass இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி


தமிழகத்தில் (Tamil nadu corona updates) இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 5,063 பேரில் சென்னையில் மட்டும் 1,023 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.