ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார். அப்போது இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைத்த மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் ஒரு சாக்கடை எப்போதும் அதில்  கால் வைக்க மாட்டேன் என்று முன்பு கூறியதற்கு பதில் அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஈரோடு: இளங்கோவன் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம்; நாம் தமிழர் வாக்குகள் விவரம்


நான் ஒரு கருத்தை ஒரு காலத்தில் சொல்லியிருப்பேன். அது தவறு என தெரிந்தால் அதை திருத்திக் கொள்வது எந்த தவறும் இல்லை எனக் கூறினார். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டதாக முன்பு கூறினார். இப்போது எடப்பாடி பழனிசாமி அறிவுரையின்பேரில் மாற்றுக் கருத்து கூறுகிறார். ஈரோட்டைப் பொறுத்தவரை நாங்கள் அனைவரும் நாகரீகமானவர்கள். சி.பா.ஆதித்தனார் காலத்தில் இருந்த நாம் தமிழர் கட்சி மட்டுமே எனக்கு தெரியும். இப்போது அப்படி ஒரு கட்சி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 


தமிழகத்தை பொறுத்தவரை 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு கூட்டணிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. காலத்திற்கு ஏற்ப கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளை பொறுத்து கருத்துகளை தெரிவித்திருக்கலாம் என்றார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக இல்லை என்றால் காங்கிரஸ் டெபாசிட் இழந்திருக்கும் என்று கூறிய கருத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஜெயக்குமார் தினம் ஒரு கெட்ட கனவு காண்பவர். அதனை வெளியில் சொல்லிக் கொண்டிருப்பார். அவர் மீது நிறைய வழக்குகள் இருக்கின்றன. அதில் இருந்து அவரை முதலில் காப்பாற்றிக் கொள்ளட்டும். தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பொறுத்தவரை இப்போது இருக்கும் தலைவரே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. இது குறித்து நாங்கள் ஆலோசிக்கவும் இல்லை என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.


மேலும் படிக்க | Madras HC: பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன் நீக்கம் செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ