திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள், கதவுகள் மற்றும் புராதனப் பொருட்கள் திருடு போனதாக வழக்கு தொடுக்க கோரிய மனுவின் மீது வரும் மார்ச் 2-க்குள் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி ஆலயத்தில் இருந்த சிலைகள், கதவுகள் மற்றும் புராதனப் பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக தெரிவித்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், ஸ்ரீரங்கம் காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்தார். 


ஆனால் இந்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், தான் அளித்த புகார் மீது, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரி ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 


இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இந்த மனுவிற்கு வரும் மார்ச் 2-ஆம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்!