தீபாவளியன்று ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தமிழகத்தில் முழுவதும் சுமார் 950 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 4,500-க்கும் மேற்பட்டோர், மருத்துவ நுட்புணர், ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் கால்சென்டர் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு தங்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என ஆண்டுதோறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஆம்புலன்ஸ்  திட்டத்தை செயல்படுத்தி வரும், GVK-EMRI நிறுவனம் இதனை கண்டுகொள்ளவில்லை. 


இந்நிலையில், நடப்பாண்டு 30% போனஸ் வழங்க வலியுறுத்தி, வரும் தீபாவளியன்று ஒருநாள் ஆதாவது, வரும் 5 ஆம் தேதி இரவு 8 மணியிலிருந்து 6 ஆம் தேதி இரவு 8 மணிவரை ஸ்டிரைக் நடைபெறும். வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். 


இந்த வழக்கை, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, 30 சதவிகித போனஸ் கோரி ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின்கீழ் ஆம்புலன்ஸ் சேவை வருவதால் ஸ்டிரைக் கூடாது என்றும் தீபாவளியன்று ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கிற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.