உயர் நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும் போது, சால்வை, நினைவு பரிசுகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டுமென கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுசம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், உயர் நீதிமன்ற நீதிபதிகளை வரவேற்பதற்காக புறநகர் பகுதியில் சாலைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும், அலுவல் ரீதியாக வரும் நீதிபதிகளை, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மட்டும் வரவேற்று, எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் தங்கவேண்டிய இடத்துக்கு அழைத்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் வருகை புரிந்தால், மரபுமுறைப்படி, அவர்கள் தங்குமிடத்திலோ, ரயில் நிலையங்களிலோ, விமான நிலையங்களிலோ வரவேற்கலாம் எனவும், நீதிமன்ற நேரத்தில் வந்தால், அதற்கு பொறுப்பான ஊழியர் மூலமாக வரவேற்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உளுந்தூர்பேட்டை: தண்ணீர் குடிக்க குடத்திற்குள் தலைவிட்டு மாட்டிகொண்ட நாய்


பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட எந்த சலுகைகளுக்காகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளுக்கு செல்லக் கூடாது எனவும், எந்த காரணத்தை கொண்டும் நீதிமன்ற நேரத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறக்கூடாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உயர் நீதிமன்ற நீதிபதிகளுடன் நேரடியாக எந்த கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும், பதிவுத்துறை மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தனிப்பட்ட முறையில் வரும் நீதிபதிகளுக்கு எந்த அணிவகுப்பு மரியாதையும் வழங்கக் கூடாது எனவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில், கருப்பு நிற கோட், கருப்பு நிற டை அணிவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 2023 ம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு  தினத்தையொட்டி  காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை  பிறப்பித்துள்ளார். அதில், “தமிழக முதலமைச்சர் அவர்கள் 09.05.2022 அன்று சட்டப்பேரவையில்  உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் / காவலர்களை ஊக்குவிப்பதற்கென மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.  அதனை தொடர்ந்து அரசாணை எண் 411, உள்( மிக)த் துறை, நாள் 03.08.2022  அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கேற்ப கீழ்கண்டகாவல் அதிகாரிகள் / ஆளிநர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பகிறது”


திரு.வெ.பத்ரிநாராயணன், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்.


திரு.டோங்கரே பிரவின் உமேஷ், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்


திரு.மா.குணசேகரன்,  காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்.


திரு. சு.முருகன்,  காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம் 


திரு.இரா.குமார், முதல் நிலை காவலர்- 1380, நாமக்கல் மாவட்டம்


மேலும் படிக்க | பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ