சென்னை: பேரிடர் மேலாண்மை தடுப்புத் திட்டத்தின் கீழ், கொரோனா பாதிப்பையடைந்த மாநிலங்களுக்கு. ரூ.11,092 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது  இதில், உத்திர பிரேதேசம், ஓடிஸா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் , கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாவட்டங்களுக்கு  மிகவும் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து இதுத்தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்தது ஏன்? கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2வது இடத்தில் உள்ள தமிழ் நாட்டிற்கு மற்ற மாநிலங்கை காட்டிலும் குறைவான நிதி மத்திய அரசு ஒதுக்க காரணம் என்ன? என கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், இதற்கான விளக்கத்தை கோர்ட்டில் மத்திய அரசு சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு விசாரித்தது. அதில் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதிக்குறித்து வாதங்கள் வைக்கப்பட்டன. 


இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கொரோனா தொற்று காரணமாக நாட்டில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதி மாநிலம் முழுவதும் நிவாரணப் பணிகள் மேர்க்கொள்ள போதுமானதாக இருக்காது.


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களுக்கு நிதி குறைவாகவும், நோய் தொற்று குறைவாக பாதித்த மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து  2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்


கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  இன்று 15வது நாள். தமிழகத்தை பொறுத்த வரை நேற்றைய நிலவரப்படி 69 புதிய நேர்மறை வழக்குகள் பதிவாகியது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. அதன்படி இந்தியாவில் மொத்தம் 5,194 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 1,018 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 149-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.