விஜயை விமர்சித்த தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கியது ஐகோர்ட்!
சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி கூறிய கருத்துக்களை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce Car) காருக்கான வரிவிலக்கு வழக்கில் நடிகர் விஜய் குறித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கியது சென்னை உயர் நீதிமன்றம். 2012ஆம் ஆண்டு வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கிட்டத்தட்ட மனுத்தாக்கல் செய்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ALSO READ | Rolls Royce tax case: சொகுசு காருக்கு வரி செலுத்தினார் நடிகர் விஜய்
நடிகர்கள் ரியல் ஹீரோக்கள் ஆக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது என்று விஜய்யை கடுமையாக சாடிய நீதிபதி சுப்பிரமணியம், விஜயின் வரிவிலக்கு மனுவையும் தள்ளுபடி செய்தார். அதோடு மட்டுமில்லாமல் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து அந்த தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் (Actor vijay) உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தனக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மீதான விமர்சனங்களை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்திருந்தார்.
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நிலுவை வரித்தொகையான 32 லட்சத்து 30 ஆயிரத்தை ரூபாய் ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம். வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்தவில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற கருத்துக்கள். இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது, குற்றவாளி போல காட்டியுள்ளது என்று நடிகர் விஜய் தரப்பில் கூறப்பட்டது. இன்னிலையில் விஜய் குறித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கி நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டது.
ALSO READ | கடந்த 20 வருடத்தில் பார்க்காத கதை! தளபதி 66 குறித்து கூறிய விஜய்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR