உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்டவிரோதமானதல்ல என குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம், திருமா மனுவினை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.


முன்னதாக., தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெறும் என தமிழக தேரதல் அணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக புதிதாக பிறிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், மாவட்ட, ஒன்றிய குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் 11-01-2020-ல் நடைபெறும். 


ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் 11-01-2020-ல் நடைபெறும்.  கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


இந்த அறிக்கையில்., உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் கொண்டு வந்துள்ளது தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்தார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை என்றும், மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்த அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 


இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்., மறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்டவிரோதமானதல்ல என குறிப்பிட்டு திருமா மனுவை தள்ளுபடி செய்துள்ளது.


---- தமிழக உள்ளாட்சி தேர்தல் ----


முன்னதாக தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கியது. இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொகுதி வரையறையை முடிக்காமல் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பளித்தது.


மேலும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தொகுதி மறுவரையறை பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதனையடுத்து கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் ஊரக உள்ளாட்சி வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். தேர்தல் தேதி அட்டவணையை இறுதி செய்வது குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.


இதனைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 7 அன்று மாலை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெரிவிக்கையில்.,  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிறபகுதிகளில் டிச 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.


உள்ளாட்சி தேர்தலுக்கு 9.12.2019 அன்று முதல் 16.12.2019 வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். 17.12.2019 அன்று வேட்பு மனு மீது ஆய்வு நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19.12.2019 அன்று கடைசி நாளாகும். இருகட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 2.1.2020 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்  என்றும் தெரிவித்தார். 


மேலும், மாவட்ட, ஒன்றிய குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் 11-01-2020-ல் நடைபெறும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் 11-01-2020-ல் நடைபெறும்.  கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


---ஊரக உள்ளாட்சித் தேர்தல் முக்கிய தேதிகள்---


வேட்பு மனு தாக்கல் - 09.12.2019
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - 16.12.2019
வேட்பு மனுக்கள் பரிசீலனை - 17.12.2019
வேட்பு மனுக்கள் வாபஸ் கடைசி நாள் - 19.12.2019
முதல்கட்ட தேர்தல் - 27.12.2019
இரண்டாம் கட்ட தேர்தல் - 30.12.2019
வாக்கு எண்ணிக்கை - 02.01.2020