கொரோனா வார்டாக பயன்படுத்திக்கொள்ள விடுதியை வழங்குகிறது சென்னை IIT!!
சென்னையில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சிக்கு உதவும் விதமாக சென்னை ஐஐடி நிர்வாகம் விடுதி ஒன்றை அளிக்க முன்வந்துள்ளது!!
சென்னையில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சிக்கு உதவும் விதமாக சென்னை ஐஐடி நிர்வாகம் விடுதி ஒன்றை அளிக்க முன்வந்துள்ளது!!
தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக ஊரடங்கை மே 3 ஆம் தேதி வரை நீடித்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2784 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இரண்டாமிடத்தில் இருந்த தமிழ்நாடு 1204 பாதிப்புகளுடன் தற்போது நான்காமிடத்தில் உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சையளிக்கவும், கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னையில், கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சிக்கு உதவும் விதமாக சென்னை IIT-ன் விடுதிகளில் ஒன்றான மகாநதி விடுதியை வழங்குவதாக சென்னை IIT இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த சூல்நிலையில், தமிழ்நாட்டில் பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ள நிலையில், கொரோனா டெஸ்ட் செய்ய பயன்படும் PCR கருவியில், 40,032 கருவிகளை டாடா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக ஏற்கனவே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.