ஜெயலலிதா சமாதியில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை
சென்னை மெரீனாவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தற்கொலை செய்துக்கொண்டார்.
எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா நினைவிடம் அமைந்துள்ள சென்னை மெரீனாவில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் தினமும் வருகின்றனர். இதனால் தினந்தோறும் அங்கு மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த மதுரையை சேர்ந்த ஆயுதப்படை காவலர் அருள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மற்ற காவலர்கள் அருளை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு நடத்தி வருகின்றார்.