வரும் செவ்வாய் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
நாளை முதல் வரும் செவ்வாய் (13.11.2018) வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!
நாளை முதல் வரும் செவ்வாய் (13.11.2018) வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!
சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்...
"மத்திய அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது.
சென்னையில் தற்போதைக்கு மழை வாய்ப்பு குறைவு; புயல் நெருங்கும்போது மழையை எதிர்பார்க்கலாம். தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தூத்துகுடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களினை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சீர்காழி அதிகப்பட்சமாக 7 செமி மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வுபகுதி வலுப்பெற்று 3 நாட்களில் புயலாக உருவெடுக்கும். காற்றழுத்த பகுதியின் தீவிரத்தினை சென்னை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வரும் 13.11.2018 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்." என தெரிவித்துள்ளார்.