TN & புதுவையில் மழை: இன்றைய வானிலை முன்னறிவிப்பு...!
DAYE புயல் கரையை கடந்தாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என மீனவர்களுக்கு சென்னை வானலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...!
DAYE புயல் கரையை கடந்தாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என மீனவர்களுக்கு சென்னை வானலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...!
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பவேறு பகுதியில், வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது...!
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தீவிரக்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலானது வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து இன்று கலிங்கபட்டிணம் கேபால்பூர் இடையே கரையை கடக்கும் என்றாலும் DAYE புயல் கரையை கடந்தாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.