ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: இன்றைய வானிலை முன்னறிவிப்பு...!
சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது...!
சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது...!
ஆந்திரா அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் என்பதால் ஆந்திரா கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்ககடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் சீற்றமாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகும் வாய்ப்புள்ளது என்பதை குறிப்பதாகும்.
இந்த நிலையில் தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னையிலும் இன்று பல இடங்களில் மாலை அல்லது இரவில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் மணிக்கு 65 முதல் 75 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்து வரும் 2 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் மிதமான மழை பெய்யும். மத்திய வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி செல்வதால் தென் தமிழகத்துக்கு மழை இருக்காது.
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்தில் 27 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் தற்போதுவரை 23 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 14 சதவீதம் குறைவு ஆகும்.