TN கடலோர மாவட்டங்களில் மழை: இன்றைய வானிலை முன்னறிவிப்பு...!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை அறிக்கையில் அறிவித்துள்ளது...!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை அறிக்கையில் அறிவித்துள்ளது...!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானாது முதல் மிதமானது வரை அடுத்த இரண்டு நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது...!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். கடலில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலில் பலத்த காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.