சென்னை: கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வெள்ளிக்கிழமை, நிகழ்நேரத்தில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ‘ஜி.சி.சி வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் சர்வீஸ்’ என்ற பிரத்யேக வாட்ஸ்அப் தொடர்பு சேவையை அறிமுகப்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“இந்த தகவல் தொடர்பு முறையைத் தொடங்கியதால், இந்தியாவில் இதுபோன்ற செயல்முறையை நடைமுறைபடுத்திய முதல் நகராட்சி அமைப்பாக சென்னை ஆனது. ஜி.சி.சி வாட்ஸ்அப் தொடர்பு சேவை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது” என்று துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) மேகநாத ரெட்டி கூறினார்.


கார்ப்பரேஷன் அறிக்கையின்படி, +91 94999 33644 என்ற எண்ணில், ஜி.சி.சி வாட்ஸ்அப் தொடர்பு சேவைக்கு ‘ஹாய்’ என்று அனுப்பி குடிமக்கள் புகார்களைப் பதிவுசெய்யவும் முந்தைய புகார்களின் நிலையை சரிபார்க்கவும் முடியும். "பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சொத்து மற்றும் தொழில்முறை வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான வாக்காளர் சேவைகளைப் பெறுதல் போன்ற சேவைகளை குடிமக்கள் இதன் மூலம் சரிபார்க்கலாம்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முயற்சி குறித்து கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் கூறுகையில், “நாங்கள் எப்போதும் அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களிலும் முன்னணியில் இருக்க விரும்புகிறோம். மேலும் நமது குடிமக்களுக்கு தடையற்ற தகவல் தொடர்பு முறையை வழங்க விரும்புகிறோம். வாட்ஸ்அப் ஒரு செய்தியிடல் தளமாக இருப்பதால், குடிமக்களுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது இதன் மூலம் வசதியாகவும் விரைவாகவும் இருக்கும்.


ALSO READ: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் இழப்பீடு


குடிமக்கள் (People) இந்த சேவைகளை எளிதாகப் பெற முடியும். மேலும் இதுபோன்ற இன்னும் பல முயற்சிகளை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இப்படிப்பட்ட செயல்முறைகள் நிர்வாகத்துக்கான பொதுமக்களின் அணுகலை எளிதாக்கும். ”


இதற்கிடையில், ஆன்லைன் புகார் போர்டல், நம்ம சென்னை விண்ணப்பம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை உள்ளடக்கி ஏற்கனவே இருக்கும் ‘புகார்கள் நிவாரண முறைக்கு’ வாட்ஸ்அப் சேவை கூடுதல் அம்சமாக அமையும் என்று மேகநாத ரெட்டி விளக்கினார்.


“வாட்ஸ்அப்பைப் (Whatsapp) பயன்படுத்தி புகார்களை எழுப்புவது பொதுமக்களுக்கு எளிதாக இருக்கும். புதிய அமைப்பு ஒரு சாட்போட்டாக (Chatbot) செயல்படுகிறது” என்று அவர் மேலும் கூறினார். ஜி.சி.சி வாட்ஸ்அப் தொடர்பு சேவை 24x7 அடிப்படையில் செயல்படும். மேலும், குடிமை அமைப்பு தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தேர்தல் தொடர்பான அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது.


"வலைத்தளம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் விரைவாகவும் எளிதாகவும் சேவைகளைப் பெற முடியும். நாங்கள் வலைத்தளத்தின் மூலம் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறோம். வரி செலுத்தும் சேவைகளும் இதில் கிடைக்கின்றன” என்று மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR