சென்னை, பெரம்பூர், செம்பியம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் வினோத்குமார், வயது 32. செம்பியம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.  சில தினங்களுக்கு முன்பு செம்பியம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார்.  அவரிடம் போலீஸ் ஏட்டு வினோத்குமார், செல் போன் எண்ணை வாங்கி வைத்து கொண்டார். அதன் பிறகு வினோத்குமார், அடிக்கடி அந்த இளம் பெண்ணை செல் போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்ததாகவும், அவரது செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி இரவு அந்த பெண்ணின் செல்போன் நம்பரில் இருந்து வினோத் குமாருக்கு மெசேஜ் வந்துள்ளது. தொடர்ந்து செல்போன் மூலமாக வினோத்குமார் சாட்டிங் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு வரும்படி மெசேஜ் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அதிகாலை வீட்டிற்கு சென்ற வினோத்குமார் அங்கு சென்று பார்த்தபோது அந்த பெண்ணின் கணவர் மற்றும் அந்த பெண்ணின் தம்பி இருந்துள்ளார்.  அந்த பெண்ணுக்கு தெரியாமல் அந்தப் பெண்ணின் கணவர் மெசேஜ் அனுப்பியது தெரியவந்தது.  இதனை அடுத்து அந்த பெண்ணின் கணவருக்கும் வினோக்குமார்க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.  இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இது குறித்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் புகார் கொடுக்க வந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கி அநாகரீகமாக நடந்து கொண்ட முதல் நிலை காவலர் வினோத் குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


மேலும் படிக்க | கரூர்: வருமானவரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக சோதனை


மேலும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஊனமுற்ற பெண்ணான கல்யாணி திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு பழனிக்குமார் தனது ஊனமுற்ற மகளான கல்யாணிக்கு பார்த்திபனூர் மும்முனை சாலையில் உள்ள 500 சதுர அடி இடத்தை உயில் எழுதி வைத்துள்ளார். பின்னர் 2008 ஆம் ஆண்டு பழனிக்குமார் உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறார். அதன் பிறகு அதில் வரும் வாடகையை வைத்து வாழ்ந்து வந்தார் கல்யாணி. அந்த இடத்தை கல்யாணியின் உடன் பிறந்த சகோதரர் சண்முகம் போலியான ரசீதுகள் மூலம் தனது பெயரில் மாற்றி வாடகை எனக்குத்தான் தரவேண்டும் என தகராறு செய்துள்ளார். 


இதனால் கல்யாணி நீதிமன்றம் சென்றார். அங்கு 2014 ஆம் ஆண்டு அந்த இடம் கல்யாணிக்கு சொந்தம் என தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த தீர்ப்பை சிறிதும் மதிக்காத சண்முகம் தொடர்ந்து கல்யாணியை துன்புறுத்தி அந்த இடத்தின் வாடகையை வாங்க விடாமல் செய்து வந்துள்ளார். நீதிமன்றத்திற்கு சென்ற பிறகும் சண்முகம் இடத்தை தரவில்லை என தாசில்தார், மாவட்ட ஆட்சியர், என அனைவரையும் பார்த்து மனு அளித்து வந்துள்ளார். ஆனால் இவரது மனுவை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நேற்று பரமக்குடி சார ஆட்சியர் இல்லத்திற்கு வந்த கல்யாணி தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை தன் உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். 


அப்போது அங்கு வந்த காவல் துறையினர் அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி அவரை காப்பாற்றினர். விசயம் அறிந்து வெளியே வந்த சார் ஆட்சியர் அக்தாப் ரசூல் நடந்த விஷயங்களை கல்யாணியிடம் கேட்டறிந்தார். உடனடியாக கல்யாணியை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார் சார் ஆட்சியர் விரைவில் கல்யாணியின் சகோதரர் சண்முகம் அபகரித்த சொத்தை மீட்டு உரியவரிடமே ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று சார் ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து தற்போது கல்யாணி அமைதி காத்து வருகிறார். திருமணம் ஆகாமல் வாழ்ந்து வரும் கல்யாணியின் சொத்தை அவரது சகோதரர் அபகரித்து அவரை துன்புறுத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | குடித்துவிட்டு பெண் போலீஸை தாக்கிய பா.ஜ.க நிர்வாகியின் மகன்-தொடர் சர்ச்சையில் சசிகலா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ