சென்னை தனியார் வங்கி 5 மாடி கட்டடத்தில் தீ!!
சென்னை பாரிமுனை பகுதியில் தனியார் வங்கி உள்ள 5 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னையில் ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னையால் அனைத்து வங்கி கிளைகளிலும் மக்கள் கூட்டம் அதிமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், சென்னை பாரிமுனை பகுதியில் தனியார் வங்கி உள்ள வங்கி கட்டடத்தில் காலையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தான் ஊழியர்கள்வங்கி உள்ளே நுழைந்து இருந்தனர். தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது ஊழியர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பினர். சம்பவ இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
தீ பிடித்த விவரம் அறிந்ததும்,வடக்கு மண்டல தீயணைப்பு படையினர் 9 வாகனங்களில் 100 பேர் வந்தனர். உரிய நேரத்தில் தீயணைப்பு ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தத்தோடு பெரும் தீயை அணைத்தனர். தீ பிடித்த கட்டடத்தில் பலர் சிக்கினர். அங்கு சிக்கியவர்களை மெகா டிராலி மூலம் பாதுகாப்பாக மீட்டு வந்தனர். அனைவரும் பத்திரமாக உள்ளனர். கட்டடத்தில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து தீ பற்றி இருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.