நேற்று போபால் சென்னை – போபால் நேரடி விமான சேவையை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதித்ராதிய சிந்தியா, இணை அமைச்சர் விகே சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இதன் தொடக்க விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜோதித்ராதித்ய சிந்தியா,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“அடுத்ததாக சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளோம்.  இதற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. அந்த 4 தளங்களிலிருந்து, நாங்கள் பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.   சரியான இடம் இறுதி செய்யப்பட்ட பின் இரண்டாவது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிப்போம்.” என தெரிவித்தார்.


மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!


இதன்படி மாநிலக் குழுவானது, பன்னூர், பாரந்தூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு இடங்களை பரிந்துரைத்து, அதை ஆய்வு செய்த மத்திய குழு பன்னூர் அல்லது பரந்தூருக்கு சம்மதம் தெரிவித்திருப்பது தெரிய வருகிறது.


பன்னூர் கிராமம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவள்ளூரையும் காஞ்சிபுரத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் பன்னூர் அமைந்துள்ளது. மற்றும், பரந்தூர் ஊராட்சி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டாரத்தில் அமைந்துள்ளது. 



சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு 2000 - 3000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்பதால் மாநில அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது. இதேபோல் புதிய விமான நிலைய பணிகள் அதிவேகமாக நடைபெற்றாலும், விமான நிலையம் முழுமைப்பெற குறைந்தது 5 ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR