திண்டுக்கல் ஐ லியோனி காருக்கு ரூ. 2500 அபராதம்... ட்விட்டர் புகாரால் போலீஸ் நடவடிக்கை!
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் பிரபல பேச்சாளருமான திண்டுக்கல் ஐ லியோனிக்கு சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வாகனத்தணிக்கை, அபராதம் விதிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் அதிக அளவில் சாலை விதிமீறல்கள் ஈடுபடுதல் தொடர்பாக புகார்கள் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு வர தொடங்கியுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக விசாரணை நடத்தி உண்மையாகவே விதிமீறல் ஈடுபட்டிருந்தால் உடனடியாக அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சேலத்தில் தொடக்கம்
அந்த வகையில் மே 21ஆம் தேதி ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெள்ளை நிற பார்சுனர் கார் ஒன்று தமிழ்நாடு அரசு இலட்சினை பொருத்தி சென்றுள்ளது. இந்த காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்ட பட்டும், பம்பர் பொருத்தப்படும், நம்பர் பிளேட் சரியாக இல்லை என கூறி ட்விட்டரில் ஒருவர் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார்.
அதனை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்த சென்னை போக்குவரத்து போலீசார் உடனடியாக 3 போக்குவரத்து விதிமீறல்களுக்கும் சேர்த்து 2500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக 500 ரூபாய் அபராதமும், நம்பர் பிளேட் முறையாக இல்லாததால் 1500 ரூபாய் அபராதமும், பம்பர் பொருத்தியதற்காக 500 ரூபாய் என மொத்தம் 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான சலான் புகார் அளித்தவருக்கு பதிலாக போக்குவரத்து காவல்துறை தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்துள்ளது.
போக்குவரத்து போலிசார் விசாரணையில் அந்த கார் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனிக்கு சொந்தமானது எனவும் அரசு பதவியில் இருப்பதால் தமிழக அரசின் இலட்சினையயை தனது சொந்த காரில் பொறுத்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் போக்குவதற்கு விதிமீறலில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | டாஸ்மாக்கில் ரூ. 2000 நோட்டை மாற்றும் திமுக...? பதுக்கல் குறித்து பாஜக குற்றச்சாட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ