திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடக்க விழாவில் மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு பேசியதாவது:- அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.


கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மிகவும் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஜெயலலிதா.  ஜெயலலிதாவை இந்த தருணத்தில் நினைவுகூர்கிறேன். சுரங்க ரெயில் பாதையில் அனைத்து பாதுக்காப்பு வசதிகளும் உள்ளன. ஜெயலலிதாவின் கோரிக்கையின் பேரில் மெட்ரோ திட்டம் விரிவு படுத்தப்பட்டது. 


சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஜெயலலிதாவின் கனவு. அந்த கனவு நனவாகி உள்ளது. ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற பிரதமர் மோடி உதவி வருகிறார். 


சென்னையின் மக்கள் தொகை பெருமளவு உயர்ந்து விட்டது. அனைத்து மாநிலங்களுடன் இணைந்து செயல்பட மத்திய அரசு விரும்புகிறது என அவர் பேசினார்.