Pongal 2025 Celebration: பொங்கல் பண்டிகை வரும் ஜன. 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல் நாள் அன்று சூரிய பொங்கலும், இரண்டாம் நாள் அன்று மாட்டுப் பொங்கலும், மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் மார்கழி 30ஆம் நாளான ஜன.13ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல், தமிழ்நாட்டை போன்று பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற அறுவடை திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், இது சாதி, மத பேதமின்றி அனைவரும் சமத்துவ பொங்கல் விட்டு பண்டிகையை கொண்டாடுவார்கள். இன்னும் சில நாள்களே பொங்கலுக்கு இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களில் பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்களும் தற்போது கலைக்கட்ட தொடங்கி உள்ளனர். 


அந்த வகையில், சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி தலைமையிலான குட் டீட்ஸ் கிளப்பின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் செஸ் ஜாம்பவானான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அவரது மனைவி அருணா மற்றம் மகன் அகில் விஸ்வநாதன்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 



மேலும் படிக்க | பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படுமா? தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு


சென்னை வேளச்சேரியில் உள்ள பார்க் ஹயாத் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. பொங்கல் மற்றும் பஞ்சாபி அறுவடை திருவிழாவான லோஹ்ரி ஆகிய பண்டிகைகள் கொண்டாட்டங்கள், சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி நிறுவிய 'குட் டேட்ஸ் கிளப்' மூலம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் தனித்தன்மையுடன் தொண்டுகள் செய்து புகழ் பெற்ற இந்த கிளப், கலாச்சாரம், பரிவு மற்றும் சமூகத்தை ஒன்றிணைப்பதன் மூலம், தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 


அந்த வகையில், இந்த மாதம் மனதிற்கு நெருக்கமான ஒரு செயலை கிளப் செயல்படுத்தி உள்ளது. வளர்ந்து வரும் கலைஞரான செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதனின் ஆனந்தின் மகன், அகில் விஸ்வநாதன்,  நரம்பியல் பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, உதவிடும் வகையில் தனது படைப்புகளான பிளாக் பிரிண்ட்கள் மற்றும் கலை வடிவமைப்புகளைக் கொண்ட தனித்துவமான ஆடைகளை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் அந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மேம்பாட்டுற்காக வழங்கினார். 


அப்போது அவரது தாயார் அருணா விஸ்வநாதன் சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி மற்றும் வினய் உடனிருந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனுடன் தி குட் டீட்ஸ் கிளப் சார்பிலும்  மாதாந்திர பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. 
இந்த நல்ல நிகழ்வில், பொங்கல் மற்றும் லோஹ்ரி பண்டிகை கொண்டாட்டமும் கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேறின. இதில் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.


மேலும் படிக்க | பொங்கல் பரிசு வழங்கப்படாது என ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் - மக்கள் ஏமாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ