புயலால் பாதித்த மாவட்டங்களை TN முதல்வர் மீண்டும் ஆய்வு....
![புயலால் பாதித்த மாவட்டங்களை TN முதல்வர் மீண்டும் ஆய்வு.... புயலால் பாதித்த மாவட்டங்களை TN முதல்வர் மீண்டும் ஆய்வு....](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/11/27/137920-edappadi-palanisamy-to-visit-in-gaja-dis.jpg?itok=TJ68hSST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு ரயில் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு ரயில் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்!
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனிடையே கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கடந்த 20 ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களை பர்வையிட்டார்.
இதை தொடர்ந்து வானிலை சரியில்லாதால் காரணத்தால் அவர் திரும்பினார். விடுபட்ட மாவட்டங்களை விரைவில் பார்வையிட இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட முதல்வருக்கு பல்வேறு முறையில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் மத்தியக் குழு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் இன்று இரவு காரைக்கால் விரைவு ரயில் மூலம் நாகை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை பார்வையிடுகிறார்.