தமிழகத்தின் கிராமப்புற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்!
தமிழகத்தின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வழங்கப்பட்டுள்ள, அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது!
தமிழகத்தின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வழங்கப்பட்டுள்ள, அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது!
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் சார்பில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வழங்கப்பட்டுள்ள, அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வழங்கப்படவுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.