தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து...!
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஞான முதல்வனாகிய விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிப்பதாக கூறியுள்ளார்.
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை அருகம்புல், எருக்கம்பூ உள்ளிட்டவற்றை கொண்டு பூஜை செய்து, கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள் ஆகியவற்றை படையலிட்டு, விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாடப்படுவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும், விநாயகரின் திருவருளாள் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.