பாசனத்திற்காக மணிமுத்தாறு பிரதான கால்வாய் திறப்பு!
பாசனத்திற்காக மணிமுத்தாறு அணை திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!
பாசனத்திற்காக மணிமுத்தாறு அணை திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1, 2, 3 மற்றும் 4-வது ரீச் மறைமுகப் பாசன ஆயக்கட்டுதாரர்கள் மணிமுத்தாறு அணையில் 80 அடி வரையிலான மீதமுள்ள நீரை ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு அறுவடை காலம் வரை பாசன குளங்களுக்கு வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணிமுத்தாறு பிரதான கால்வாயில் 1, 2, 3 மற்றும் 4-வது ரீச் கீழ் உள்ள 22,852 ஏக்கர் மறைமுகப் பாசனப் பகுதிகளில் நிலவும் கடும் வறண்ட சூழ்நிலையையும், அறுவடைக் காலம் வரை தங்ணீர் வழங்க வேண்டியுள்ளதை கருத்தில் கொண்டும் 01.02.2019 முதல் 20.02.2019 வரை மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1,2,3 மற்றும் 4-வது ரீச்பகுதிகளுக்கு 800 மி.க.அடிக்கு மிகாமல் தங்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதனால், மணிமுத்தாறு அணையிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அண்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரண் மற்றுப் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை திருவைகுங்டம், திருச்சந்தூர் ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் உள்ள 22,852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தமிழக அரசு செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.