மணிமுத்தாறு அணையின் பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அணையின் பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர் உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.


மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர் உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்ட வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள பெருங்கால் பாசனம் மூலம் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு 7.11.2018 முதல் 31.3.2019 வரை 145 நாட்களுக்கு மணிமுத்தாறு அணையிலிருந்து 399.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீரை திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


இதனால், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள 2756.62 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் குறிப்பிடப்பட்டுள்ளது!