கோவை அருகே வீட்டின் முன்பு நின்றிருந்த குழந்தையை கடிக்க முற்பட்ட தெரு நாய்களிடமிருந்து குழந்தையின் தந்தை காப்பாற்றும் பாதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சமீப காலங்களில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக இவை குழந்தைகளை தாக்கும் பல வீடியோ காட்சிகளை நாம் அண்மையில் பார்த்துள்ளோம். தெரு நாய்களின் பிடியில் சிக்கிக்கொள்ள இருந்த குழந்தையை நொடிப்பொழுதில் ஒரு தந்தை காப்பாற்றியுள்ளார். அந்த காட்சி இப்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து இங்கே காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தனது மகனை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த நான்கு தெருநாய்கள் குழந்தையை நோக்கி கடிபதற்க்கு ஓடி வந்துள்ளன. இதனை பார்த்த அந்த சிறுவன் அச்சமின்றி கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்களை விரட்ட முயன்றுள்ளார். 


ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் நொடிகளில் சிறுவனை தாக்க வேகமான சிறுவன் முன் ஓடி வந்தன. தெருநாய்கள் சுற்றி வளைப்பதை பார்த்து சிறுவன்  கூச்சலிட்டுள்ளார். கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருந்த தந்தை விரைந்து வந்து சிறுவனை மீட்ட நிலையில், அங்கிருந்து தெருநாய்கள் வந்த வேகமாக திரும்பின. 


மேலும் படிக்க | சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!


இந்த  காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் சிறுவன் நான்கு தெரு நாய்கள் வருவதைப் பார்த்து கல்லை எடுப்பதும், நொடிகளில் தெரு நாய்கள் சிறுவனை சுற்றி வளைப்பதும், அச்சத்தில் இருந்த சிறுவனை கணப்பொழுதில் தந்தை காப்பாற்றுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 



அண்மைக்காலமாக தெரு நாய்கள்  குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.


மேலும் படிக்க | நடந்து முடிந்த த.வெ.க கல்வி விருதுகள் விழா! ஹைலைட்ஸ் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ