சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தும் நடந்தவைகளை வெளியே கூறாமல் இருக்க மிரட்டியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தும் நடந்தவைகளை வெளியே கூறாமல் இருக்க கத்தியை காட்டி மிரட்டியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியிலுள்ள சிறுமியை தங்கச்சாமி என்ற நியூட்டன் ( வயது 47) சிறுமியை கடத்தி ஒரு வாரம் தனி அறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று கத்தியைக் காட்டி மிரட்டியதாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
ALSO READ | குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் - டிஜிபி உத்தரவு!
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று தங்கச்சாமி என்ற நியூட்ரன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதம் அதை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி ஜே வெங்கடேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றவாளி தங்கசாமி என்ற நியூட்ரானை மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
ALSO READ | கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி; இருவர் பலி!
ALSO READ | கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR