கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 2022: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினர்.
கிறிஸ்துமஸ் தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த திருவிழா நாடு முழுவதும் தேவாலயங்கள் வண்ண விளக்குகளா கலைக்கட்ட தொடங்கியுள்ளது. கிறிஸ்துவ மக்கள் ஒரு மாதமாக கடுமையாக விரதம் மேற்கொண்டு கிறிஸ்மஸ் விழாவை வரவேற்க தொடங்கி காத்திருந்த நிலையில் கிறிஸ்துமஸ் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சேலத்தில் பிரசித்தி பெற்ற நான்கு ரோடு பகுதியில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்மஸ் தின விழாவை முன்னிட்டு தேவாலயங்கள் முழுவதும் வண்ண வண்ண விளக்குக அலங்காரம் செய்யப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது இதில் திருப்பலிப் பாடல்கள் பாடப்பட்டது இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிருஸ்துவ மக்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் படிக்க | கிறிஸ்துமஸ் பண்டிகை: கோவையில் கேக் விற்பனை தீவிரம்
மேலும் இளைஞர்கள் கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கிறிஸ்மஸ் தாத்தா வேடமடைந்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
நள்ளிரவிலும் ஏராளமான கடைகள் செயல்பட்டு வந்தது அதில் மக்கள் கூட்டம் அலைமோதியது திருவிழாவைப் போல காணப்பட்டது. இதே போல சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது தேவாலயங்கள் முழுவதும் வர்ண விளக்குகளால் ஜொலித்து காணப்பட்டது.
மேலும் படிக்க | கிறிஸ்துமஸ்: சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ